ஈகோ-வை தள்ளி வைத்து விட்டு புத்திசாலித்தனமாக ஆடினோம் - ஜிம்பாப்வே தொடக்க வீரர் பென்னெட்...
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஜிம்பாப்வே அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் பின்னணி குறித்து பேசிய தொடக்க வீரர் பிரையன் பென்னெட், “எங்கள் ‘ஈகோ’வை தள்ளி நிறுத்திவிட்டு புத்திசாலித்தனமாக விளையாடினோம்” என்று தெரிவித்தார்.
2007-ல் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அப்போது ஆஸி. இடது கை வேகப்பந்து வீச்சாளர் நேதன் பிராக்கனை 22 வயதான ஜிம்பாப்வேயின் சிறந்த வீரராக உருவெடுத்த பிரெண்டன் டெய்லர் பவுண்டரி விளாசி வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணியினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இப்போது 19 ஆண்டுகளுகுப் பிறகு ஜிம்பாப்வே மீண்டும் ஆஸ்திரேலியாவை உலகக்கோப்பையில் வீழ்த்தியது.
கொழும்புவில் உள்ள கெட்டாராமா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மைதானத்தின் எல்லைக்கோடுகள் ஒவ்வொரு புறமும் ஒவ்வொரு நீளம் கொண்டதாக இருந்தது.
அதனால் பேட்டிங்கில் கவனமாக அணுகுமுறை தேவைப்பட்டது. காற்றின் திசை மற்றும் எதிரணியின் தரமான பந்துவீச்சை கருத்தில் கொண்டு, பெரிய ஷாட்களுக்கு பதிலாக தரையில் அடித்து ரன்களை திரட்டுவது என்ற திட்டத்துடன் ஜிம்பாப்வே களமிறங்கியதாக பென்னெட் தெரிவித்தார்.
அதன் பலனாக, ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த பென்னெட், அணியின் இன்னிங்ஸை கட்டுப்படுத்திய முக்கிய வீரராக திகழ்ந்தார். தொடக்கத்தில் ததிவனாஷே மருமாணியுடன் இணைந்து 61 ரன்கள் சேர்த்தது அணிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. மருமாணி 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு ஜிம்பாப்வே தொடக்க வீரர் பென்னெட் கூறியபோது, “இந்த மைதானத்தில் முதலில் நிலைநிறுத்திக் கொண்டால் பின்னர் ரன்கள் எடுக்க எளிதாக இருக்கும். அதைத்தான் நான் செய்தேன். இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அதிக உற்சாகத்தில் மிதக்காமல், மீண்டும் திட்டமிட்டு விளையாட வேண்டும்.
Comments
No comments yet.